நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை – சுகாதார துறை எச்சரிக்கை!

Saturday, July 24th, 2021

நாட்டில் மீண்டும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 6 நாட்களுக்கு முன்னர் குறைந்தளவிலான நோயாளர்கள் பதிவாகினர். எனினும், தற்போது நாளாந்தம் 1,700க்கும் அதிகமான நோயாளர்கள் பதிவாகின்றனர்.

அதேநேரம் நாட்டில் நேற்றைய தினத்தில் 1,815 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.

அவர்களில் புத்தாண்டு கொத்தணியுடன் தொடர்புடைய 1,785 பேரும், வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 30 பேரும் உள்ளடங்குகின்றனர்.

இதன்படி, நாட்டில் கொவிட் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2இலட்சத்து 93 ஆயிரத்து 113 ஆக உயர்வடைந்துள்ளது. அதேநேரம், கொவிட்-19 தொற்றிலிருந்து நேற்றைய தினம் 953 பேர் குணமடைந்தனர்.

இதன்படி, நாட்டில் இதுவரை கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 65 ஆயிரத்து 708 ஆக அதிகரித்துள்ளது.

எனவே தற்போது மீண்டும் தலைத்தூக்கியுள்ள கொவிட் தொற்று தொடர்பில் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related posts: