நாட்டில் மின்சார பற்றாக் குறையை தீர்க்க வருகின்றது மாற்றுத்திட்டம்!

Saturday, December 31st, 2016

தனியார் மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து மின்சாரம் பெற்றுக்கொள்ள இலங்கை மின்சாரசபை மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சிடம் கடிதம் ஊடாக கோரியுள்ளது.

நாட்டில் வறட்சி காரணமாக மின்சார உற்பத்தி வரையறுக்கப்பட்டிருப்பதாகவும் இதனால் மின்சாரத்தை தனியார் மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து கொள்வனவு செய்ய நேரிட்டுள்ளதாகவும் அமைச்சிற்கு அறிவித்துள்ளது.

குறித்த தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து 60 மெகாவோற் மின்சாரம் கொள்வனவு செய்ய நேரிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

அத்துடன் மூன்று தனியார் மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்யும் ஒப்பந்தங்களை புதுப்பித்துக் கொள்ள கடிதம் ஊடாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த கடிதம் மின்வலு எரிசக்தி அமைச்சிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள போதிலும் மின்சாரத்தினை கொள்வனவு செய்வதா இல்லையா? என்பது தொடர்பில் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. மேலும் நாடு முழுவதிலும் உள்ள நீர் மின் உற்பத்தி நிலையங்களில் மின்சார உற்பத்தி பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

599fb29aa9701270b6a9ff19f1902a35_XL