நாட்டில் மின்சார துண்டிப்பு ஏற்பட வாய்ப்பு ?  

Monday, September 18th, 2017

நாடு முழுவதும் மின்சார சபை ஊழியர்கள் தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.இந்நிலையில் மின்சார சபை அதிகாரிகளும் அதில் இணைந்து கொள்ளவுள்ளதாக மின்சார சபை பொது ஊழியர் சங்க தலைவர் மாலக விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மின்சார ஊழியர்களும் நேற்று முதல் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கியுள்ளனர்.இதன் காரணமாக பொய்லர்களுக்கு நீர் வழங்கும் நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இன்னும் 4 நாட்கள் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டால் மின்சாரம் வழங்கும் நடவடிக்கைகளுக்கு பாரிய நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் நாடு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்படும் ஆபத்து ஏற்படும் என தெரிவிக்கப்படுகின்றது.இதேவேளை பேசித் தீர்த்துக் கொள்ள வாய்ப்புள்ளதாக நாளை முதல் போராட்டத்தை கைவிடுமாறு போராட்டக்காரர்களை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலப்பிட்டிய கேட்டுள்ளார்.மின்சார சபையில் இடம்பெறும் ஊழலை நிறுத்த வேண்டும் என கோரிக்கை முன்வைத்து நாடு தழுவிய ரீதியில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: