நாட்டில் மழையுடன் கூடிய காலநிலை!
Sunday, August 13th, 2017நாட்டின் பல பிரதேசங்களில் மழையுடன் கூடிய காலநிலையை எதிர்பார்க்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டில் 18 மாவட்டங்களில் கடும் வறட்சியினால் மக்கன் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியருக்கும் நிலையில் இன்று முதல் இந்தக் காலநிலையில் மாற்றம் எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.
தற்போது நாட்டில் 18 மாவட்டங்களில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதாக தேசிய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதனால் 36 ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. வறட்சியினால் வடமாகாண மக்களே கூடுதலாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். வடமேல் மாகாணத்தில் 3 இலட்சத்து 63 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு;ள்ளனர்.
இதேவேளை ,இந்த வறட்சி நீர் மின் உற்பத்திக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நீர்ப்பாசனத் திணைக்களத்திற்கு சொந்தமான பிரதான மற்றும் நடுத்தரமான 73 நீர்த்தேக்கங்களின் கொள்ளளவு 14 சதவீதம் என்ற குறைந்த பட்ச மட்டத்தில் காணப்படுகின்றது. இதனால், சிறுபோகத்தில் 2 இலட்சம் ஹெக்டயர் நிலப்பரப்பில் மாத்திரம் நெற்செய்கை மேற்கொள்ள முடிந்துள்ளது தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
|
|