நாட்டில் மருந்து வகைகளுக்கு எந்தவித தட்டுப்பாடும் இல்லை என அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர்!

Saturday, November 7th, 2020

சிலர் குற்றம் சாட்டும் வகையில் நாட்டில் மருந்து வகைகளுக்கு எந்தவித தட்டுப்பாடும் இல்லை என அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

8 தொடக்கம் 10 மாத காலப்பகுதிக்கு தேவையான போதுமானளவு மருந்து வகைகள் நாட்டில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

இலங்கையில் மருந்து வகைகளை தயாரிப்பதற்கான அடிப்படை நடவடிக்கைகள் பல மேற்கொண்டிருப்பதாகவும் தெரிவித்த அவர் எதிர் காலத்தில் மருந்து வகைகளை இறக்குமதி செய்வதை குறைத்து கொள்ளக்கூடியதாக இருக்கும் என்றும் விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: