நாட்டில் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளது – பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவிப்பு!

Sunday, March 6th, 2022

இலங்கையில் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

நாட்டிற்குத் தேவையான எரிபொருள் தற்போது இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் இது தொடர்பாக தெரிவிக்கையில் –

நாட்டில் ஏற்கனவே கப்பலில் இருந்து இறக்கப்பட்ட எரிபொருள் தற்போது விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

மேலும் இரண்டு எண்ணெய்க் கப்பல்கள் நாட்டை வந்தடைந்துள்ளன. அவற்றுக்கான டொலர் செலுத்தப்பட்டுள்ள நிலையில் எரிபொருட்களை இறக்கும் செயற்பாடுகள் இடம்பெறவுள்ளது.

வீணான அச்சம் காரணமாக நீண்ட வரிசையில் நின்று எரிபொருளை பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் தேவையில்லையென நாட்டு மக்களுக்கு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக நாட்டில் ஏற்பட்ட எரிபொருள் நெருக்கடி காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் வாகன சாரதிகள் நீண்ட நேரம் காத்திருந்து எரிபொருள்களைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. 

000

Related posts:

இலங்கையின் மிகப்பெரிய கொரோனா வைத்தியசாலைகளில் ஒன்றாக மாற்றம் பெறும் கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூர...
புலமைப்பரிசில் - உயர்தரப் பரீட்சைகள் தொடர்பில் எதிர்வரும் தினங்களில் முக்கிய தீர்மானம் - கல்வி அமைச்...
ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் நிதியை கடனாக பெற் நடவடிக்கை – இந்தியா செல்கிறார் நிதி அமைச்சர் பசில் - ...