நாட்டில் புதிய கொவிட் கொத்தணிகள் உருவாகும் அபாயம் – தொற்றுநோயியல் விஞ்ஞான பிரிவின் பணிப்பாளர் சுதத் சமரவீர எச்சரிக்கை!

Thursday, April 8th, 2021

நாட்டில் எந்த வேளையிலும் புதிய கொவிட் கொத்தணிகள் உருவாகும் அச்சுறுத்தல் இருப்பதாக தொற்றுநோயியல் விஞ்ஞான பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின்போதே அவர் இதனைக் தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் –

தற்போது நாளாந்தம் பதிவாகின்ற கொவிட்-19 நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது. ஆனாலும் இந்த நோய்த்தொற்று கொத்தணிகள் உருவாகும் அச்சுறுத்தல் அதிகமாகவே உள்ளது.

அதேநேரம் தற்போது பண்டிகை காலம் ஆரம்பிக்கிறது. இந்த காலப்பகுதியில் பொதுமக்கள் பாதுகாப்பாக நடந்து கொள்ளாவிட்டால், மீண்டும் கொவிட் பரவல் தீவிரமடையும் அச்சுறுத்தல் அதிகமாக உள்ளது என்றும் அவர் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: