நாட்டில் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு !

Sunday, August 4th, 2019

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெறவுள்ள மத நிகழ்வுகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்படவுள்ளன.

குறிப்பாக கண்டி தலதாமாளிகை யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயம் சிலாபம் தலவில சென் அந்தோனியார் ஆலய திருவிழா மற்றும் கண்டி எசலபெரஹரா ஆகியவற்றிற்கு பாதுகாப்பு முழுமையாக பலப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக அமெரிக்கா வெளியிட்ட அறிக்கையின் பிரகாரம் இலங்கையின் பாதுகாப்பு விடயங்களில் கூடிய எச்சரிக்கை வேண்டும் என்ற நிலைமையை எடுத்துக்காட்டியிருக்கின்றது. அதனை அடுத்து இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுமையாக பலப்படுத்தியிருக்கின்றது.

பாதுகாப்பு செயலாளர் சாந்த கொட்டேகொட நேற்று தலதாமாளிகைக்கு விஜயம் செய்து அங்குள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பார்வையிட்டுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்திலும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படலாம் என்ற அச்சத்தில் இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Related posts: