நாட்டில் நேற்றைய தினம் 2,959 பேருக்கு கொவிட் தொற்று உறுதி – சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவிப்பு!

Monday, May 24th, 2021

நாட்டில் நேற்றையதினம் 2 ஆயிரத்து 959 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இவர்களில் வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பிய 14 பேரும் உள்ளடங்குவதாக தெரிவித்துள்ளது.

புத்தாண்டு கொத்தணியில் மாத்திரம் நேற்றையதினம் 2 ஆயிரத்து 945 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியானதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட்19 தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 64 ஆயிரத்து 201 ஆக உயர்வடைந்துள்ளது.

அதேநேரம், நாட்டில் கொவிட்-19 தொற்றினால் பீடிக்கப்பட்டிருந்த மேலும் ஆயிரத்து 612 பேர் நேற்று குணமடைந்துள்ளனர்.

இதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 28 ஆயிரத்து 607ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் 34 ஆயிரத்து 416 பேர் தொடர்ந்தும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: