நாட்டில் நிலவும் வறட்சி காரணமாக நாளாந்த மின்சாரத்திற்கான தேவை அதிகரிப்பு – இலங்கை மின்சார சபை தெரிவிப்பு!
Monday, February 19th, 2024தற்போது நாட்டில் நிலவும் வறட்சி காரணமாக நாளாந்த மின்சாரத்திற்கான தேவை 3 முதல் 4 ஜிகாவோட் (Gigawatts ) வரை அதிகரித்துள்ளதாக என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இது குறித்து இலங்கை மின்சார சபையின் ஊடகப்பேச்சாளர் நோயல் பிரியந்த கருத்துத் தெரிவிக்கையில் ”இந்நாட்களில் நீர் மின் உற்பத்தி 21 வீதமாகக் குறைந்துள்ளது.
அந்தவகையில் நாட்டில் தற்போது சூரியசக்தி மூலம் 4.5 வீத மின்சாரமும், காற்றாலை மூலம் 5 வீத மின்சாரமும், அனல் மின் உற்பத்தி மூலம் 64 வீத மின்சாரமும் பெறப்படுகின்றது. எனவே மக்கள் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
000
Related posts:
விவசாயத் திணைக்களத்தில் ஆளணி வெற்றிடங்களால்பணிகளை முன்னகர்த்த முடியாத நிலைமை
நேபாளம் – இலங்கைக்கு இடையிலான விமான சேவை!
கடுமையான சுகாதார வழிகாட்டுதல்களின் கீழ் பாடசாலைகள் திறக்கப்படலாம் - சுகாதார சேவைகளின் பிரதிப் பணிப்ப...
|
|