நாட்டில் நிலவும் வரட்சியான காலநிலையால் மின்சார உற்பத்தி பாதிப்பு!

Friday, September 30th, 2016

நாட்டில் நிலவும் வரட்சியான காலநிலையால் மின்சார உற்பத்தி நுற்றுக்கு 15 சதவீதமாக குறைவடைந்துள்ளது.இதன் காரணமாக நாட்டில் மின்சார உற்பத்தி குறைவடைந்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஊடக பேச்சாளர் சுலக்ஷனா தெரிவித்துள்ளார்,

மின்சாரத்தை சேமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.மேலும் தொடரும் வரட்சியான காலநிலையினால் ஒரு இலட்சம் ஏக்கருக்கும் அதிகமான வயல்நிலங்கள் அழிவடைந்துள்ளதாக கமநல அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.

பொலன்னறுவை, அனுராதபுரம் மற்றும் குருநாகல் மாவட்டங்களிலுள்ள வயல் நிலங்களே வரட்சியினால் அதிகம் பாதிப்படைந்துள்ளதாக கமநல அபிவிருத்தி திணைக்கள ஆணையாளர் நாயகம் சுனில் வீரசிங்க குறிப்பிட்டார்.இதுதவிர மேலதிக பயிர்ச் செய்கைகள் பலவற்றிற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

பாதிக்கப்பட்டுள்ள வயல் நிலங்களுக்காக இழப்பீடு வழங்குவது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கமநல அபிவிருத்தி ஆணையைாளர் நாயகம் தெரிவித்தார்.விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபையில் காப்பீடு செய்யப்பட்டுள்ள வயல்களுக்கு இழப்பீடுகளை வழங்குவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் கீழுள்ள குளங்களினால் 60 வீதமான செய்கைகளுக்காக நீரை விநியோகிக்க முடியாதவாறு, அவற்றின் நீர்மட்டம் வற்றியுள்ளதாகவும் அந்த திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

Electricity

Related posts: