நாட்டில் நல்ல தலைமை இருக்கிறது : ஒருபோதும் நாங்கள் தோல்வியடைய மாட்டோம் – இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா உறுதி!

Friday, November 13th, 2020

நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்தும் செயல்முறை மற்றும் பொருளாதாரம் மக்கள் மீது குறைந்தபட்ச அழுத்தத்துடனேயே மேற்கொள்ளப்பட்டு வருவதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த இராணுவத் தளபதி –

“நாங்கள் தோல்வியடையவில்லை. எந்த தோல்வியும் எமக்கு ஏற்படவில்லை. அதிக மக்கள் தொகை அடர்த்தியைக் கொண்ட கொழும்பை நிர்வகித்துள்ளோம்.

நாட்டின் மீன் சந்தை முழு நாட்டிற்கும் மீன் வழங்கும் முக்கிய இடமாகும். இதனால் தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. மினுவங்கொடையில் உள்ள கொத்தணியை எங்களால் முழுமையாக கட்டுப்படுத்த முடிந்தது. அதில் 3106 பேர் பாதிக்கப்பட்டனர். நான் சொன்னது போல், நாங்கள் ஒருபோதும் தோல்வியடைய மாட்டோம்.

நாட்டில் நல்ல தலைமை இருக்கிறது. ஒரு சிறந்த அரசு இருக்கிறது. எங்கள் ஓய்வு பெற்றவர்களும் வெளிநாட்டிலுள்ளவர்களும் இதற்கு உதவுகிறார்கள். இதை எல்லோரும் ஒன்றாகச் செய்கிறோம். உன்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: