நாட்டில் தேவையான அளவு சீனி கையிரப்பில் – சீனி இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டதாக ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாட்டாளர் தெரிவிப்பு!

Saturday, June 26th, 2021

கடந்த 22 ஆம் திகதிமுதல் அமுலுக்கு வரும் வகையில் சீனி இறக்குமதி தடை செய்யப்பட்டுள்ளதாக ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாட்டாளர் தமயந்தி கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

இதன்படி தற்போதைக்கு இறக்குமதி செய்ய எதிர்பார்த்துள்ள கப்பலில் ஏற்றப்படாத சீனியை இறக்குமதி செய்ய தடை செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு காணப்படும் சீனி தொகை 40 இறக்குமதியாளர்களிடம் இருந்து 200 ஆயிரம் டொன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நாட்டில் தேவையான அளவு சீனி இருப்பதால் இறக்குதி தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அதன் ஊடாக டொலர் பெறுமதியை பாதுகாக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: