நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை – மரக்கறிகளின் விலைகள் பன்மடங்கு அதிகரிப்பு!.
Tuesday, January 16th, 2024நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் மரக்கறிகளின் விலைகளும் பன்மடங்கு அதிகரித்துள்ளன.
இவ்வாறானதொரு நிலையில், வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் நாடு முழுவதிலுமுள்ள பொதுச் சந்தைகளில் ஒரு கிலோ கரட் 2000 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
அதேபோன்று மலையக மரக்கறிகளின் விலைகளும் அதிகரித்துள்ளதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
மரக்கறிகளின் விலை உயர்வால் பொதுச் சந்தைகளில் வந்த பெருந்தொகையான நுகர்வோர் மரக்கறிகளை கொள்வனவு செய்வதை தவிர்த்து வருவதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்..
ஏனைய நாட்களில் தம்புள்ளை பொதுச் சந்தைக்கு அதிகளவான நுகர்வோர்கள் வருகை தந்திருந்த நிலையில் கடந்த சில தினங்களில் வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோர்கள் சந்தைக்கு வருவதில் பெரும் வீழ்ச்சி காணப்பட்டது.
மேலும் முட்டைக்கோஸ் 1 கிலோகிராம் 570 ரூபாவாகவும் முள்ளங்கி 1 கிலோகிராம் 160 ரூபாவாகவும் கிழங்கு 1 கிலோகிராம் 370 ரூபாவாகவும் குடைமிளகாய் சிவப்பு 1 கிலோகிராம் 800 ரூபாவாகவும் குடைமிளகாய் மஞ்சள் 1 கிலோகிராம் 700 ரூபாவாகவும் துளசி ரூபாய் 1 கிலோகிராம் 2600 ரூபாய் சீன முட்டைக்கோஸ் 1 கிலோகிராம் 1,300 ரூபாவாகவும் சிவப்பு முட்டைக்கோஸ் 1 கிலோகிராம் 3,200 ரூபாவாகவும் கொத்தமல்லி தழை 1 கிலோகிராம் 450 ரூபாவாகவும்
சர்க்கரை வாழைப்பழம் 1 கிலோகிராம் 110 ரூபாவாகவும் புளி வாழைப்பழம் 1 கிலோகிராம் 110 ரூபாவாகவும் கொய்யா 1 கிலோகிராம் 280 ரூபாவாகவும் தர்பூசணி 1 கிலோகிராம் 140 ரூபாவாகவும் அன்னாசிப்பழம் 1 கிலோகிராம் 400 ரூபாவாகவும் விலைகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|