நாட்டில் தற்போது நிலவும் வறட்சியால் அதிகமானோர் பாதிப்பு!

Wednesday, February 21st, 2018

நாட்டில் நிலவும் வறட்சி காரணமாக  பல மாவட்டங்களில் இதுவரை 2 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் அதிகம் குருணாகல் புத்தளம் மன்னார் அநுராதபுரம் மற்றும் பொலனறுவை மாவட்டங்களே பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த வறட்சி காரணமாக நீர்மின் உற்பத்திக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் மீள்புத்தாக்கல் அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன்நாளொன்றுக்கான மின் நுகர்வு மணித்தியாலயத்திற்கு 43 ஜிகாவோட்ஸாக அதிகரித்துச் சென்றுள்ளதாக அமைச்சின் ஊடக பேச்சாளர் சுலக்ஷன ஜெயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வறட்சிப் பாதிப்புக்கள் இருக்குமாயின் 117 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு தகவல் வழங்குமாறு மத்தியநிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டுள்ளார்.

Related posts: