நாட்டில் தற்போது தனிமைப்படுத்தல் பிரதேசங்கள் என எதுவும் கிடையாது – இராணுவத் தளபதி சவேந்திர சில்வா அறிவிப்பு!

Friday, May 15th, 2020

கொரோனா வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்ட பகுதிகளான கொழும்பு 12 பண்டாரநாயக்க மாவத்தை ,ஜா எல,சுதுவெல்ல பகுதிகள் தனிமைப்படுத்தல் பிரதேங்களாக தொடர்ந்தும் இருக்கமாட்டாதென இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாட்டில் தனிமைப்படுத்தல் நிலையங்கள் எதுவும் தற்போது இல்லையெனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

மேலும் நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் 10 பேரில் 8 பேர் கடற்படைச் சிப்பாய்கள் என்றும் மற்ற இருவர் அவர்களுடன் பழகியவர்கள் என்றும் அவர் தெரிவித்த இராணுவத் தளபதி எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு மக்கள் மேலும் கவனமாக இருக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

Related posts: