நாட்டில் தனியார் கைகளில் 35,000 துப்பாக்கிகள் – பாதுகாப்பு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி தெரிவிப்பு!

Sunday, October 16th, 2022

துப்பாக்கி வைத்திருக்கும் தனியார் டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் துப்பாக்கி உரிமத்தை புதுப்பிக்க வேண்டும் அல்லது கடுமையான அபராதத்தை எதிர்கொள்ள நேரிடும் என்று பாதுகாப்பு அமைச்சகத்தின் (MOD) மூத்த அதிகாரி நேற்று தெரிவித்தார்.

தனியார் மற்றும் அமைப்புகளிடம் 35,000 க்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் உள்ளன என்றும், பெரும்பாலான ஆயுதங்கள் 12 மற்றும் 16 துளை துப்பாக்கி வகையைச் சேர்ந்தவை என்றும் அவர் கூறியுள்ளார்.

டிசம்பர் 31 ற்கு முன்னர் துப்பாக்கி அனுமதியை புதுப்பிக்க தவறினால் அவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்றும் துப்பாக்கிகளை பொலிஸார் பறிமுதல் செய்வார்கள் என்றும் அவர் கூறினார்.

மேலும், துப்பாக்கிகளின் உரிமையாளர்கள் இறந்திருக்கலாம் அல்லது தற்போது வெளிநாட்டில் வசிக்கும் சந்தர்ப்பங்கள் இருக்கலாம், அனுமதிகளை புதுப்பிக்கும் நடவடிக்கையை நாடு முழுவதிலும் உள்ள பிரதேச செயலக அலுவலகங்களில் மேற்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டமையால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது – நிதி அமை...
உயர்தர பரீட்சை தொடர்பான வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளுக்கு இன்று நள்ளிரவுமுதல் தடை...
இலங்கையில் ஆண்களுக்கு தட்டுப்பாடு - திருமணம் செய்து கொள்வோரின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருவதா...