நாட்டில் டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கையும் 80 ஆயிரத்தைக் கடந்தது – சுகாதாரப்பிரிவு எச்சரிக்கை!

நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை காரணமாக, மீண்டும் டெங்கு நோய் பரவல் தீவிரமடையும் நிலை உருவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த மாதத்தின், கடந்த சில தினங்களில் மாத்திரம் 184 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த மாதம் 888 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இந்நிலையில், வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 80,031 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை நாட்டின் பல மாவட்டங்களில் பதிவாகக் கூடிய அச்சுறுத்தல் நிலவுவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
Related posts:
ஹோட்டல்களில் திருமண வைபவங்களை நடத்த இன்றுமுதல் அனுமதி - சுற்றுலா மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்ச...
வார இறுதி நாட்களில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு பிறப்பிக்கம் எண்ணம் கிடையாது - பிரதி பொலிஸ்மா அதிபர் அ...
ஜனாதிபதி தலைமையில் எதிர்வரும் 23ஆம் திகதி சர்வக்கட்சி மாநாடு!
|
|