நாட்டில் சீனி – பால்மாவுடன் எரிவாயுவிற்கான தட்டுப்பாடும் இல்லை – அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவிப்பு!

Wednesday, August 11th, 2021

நாட்டில் சீனி மற்றும் பால்மா என்பவற்றிற்கு தட்டுப்பாடு இல்லை என இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இறக்குமதி செய்யப்படும் பால்மாவுக்காக விதிக்கப்பட்டுள்ள வரிகளை முழுமையாக நீக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை சமையல் எரிவாயுவிற்கான தட்டுப்பாடு நீங்கும் வகையில், ஒரு இலட்சம் வீட்டு பாவனைக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்களை நாளாந்தம் சந்தைகளுக்கு விநியோகிக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

சந்தைகளுக்கு எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்கும் நடவடிக்கை நேற்றுமுதல் ஆரம்பிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்தவகையில் சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு நிலவுவதாக அச்சமடைய வேண்டாம் என பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ள அதேநேரம், நாட்டிற்கு தேவையான சமையல் எரிவாயு தமது நிறுவனத்திடம் உள்ளதாகவும் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: