நாட்டில் கொரோனா மரணம் அதிகரிப்பு!

Tuesday, November 10th, 2020

கொரோனா தொற்றினால் மேலும் 05 மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதனை அடுத்து கொரோனா தொற்றினால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது.

51 வயதுடைய ஆண், கொழும்பு 10 ஐ சேர்ந்த 45 ஆண், கம்பஹாவை சேர்ந்த 63 வயதுடைய பெண்ணொருவரும் 55- 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்

இதனுடையே நாட்டில் மேலும் 305 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தொற்று கண்டறியப்பட்டவர்கள் அனைவரும் பேலியகொட கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மினுவாங்கொட மற்றும் பேலியகொட மீன் சந்தை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 108 ஆதிகரித்துள்ளது.

இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 14ஆயிரத்து 590ஆக அதிகரித்துள்ளது

Related posts: