நாட்டில் கொரோனா அபாயம் குறையவில்லை – இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி எச்சரிக்கை!

Thursday, October 28th, 2021

நாளாந்தம் அடையாளம் காணப்படும் கொரோனா நோயாளர்கள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கையில் குறைவு ஏற்பட்டாலும், ஆபத்து குறையவில்லை என இராஜாங்க அமைச்சரான சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.

அத்துடன் டெல்டா பிளஸ் பிறழ்வு நாட்டுக்குள் நுழையும் அபாயம் உள்ளது எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளில் தடுப்பூசித் திட்டம் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட நிலையில், டெல்டா பிளஸ் பிறழ்வால் ஆபத்து மீண்டும் அதிகரித்துள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

இலங்கையும் அத்தகைய ஆபத்திலேயே உள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: