நாட்டில் கையிருப்பில் உள்ள அத்தியாவசிய உணவு பொருட்களின் தொகை குறித்து மதிப்பீடு – சந்தை, வணிக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு தெரிவிப்பு!
Friday, May 27th, 2022நாட்டின் கையிருப்பில் உள்ள, அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் தொகை குறித்து, கணக்கிடப்பட்டு வருவதாக, சந்தை, வணிக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தக் கணக்கெடுப்பு நிறைவடைந்த பின்னர், நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட வேண்டிய அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களின் தொகை குறித்து தீர்மானிக்கப்படும் என அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், எதிர்காலத்தில் முகங்கொடுக்க வேண்டியுள்ள உணவு நெருக்கடிக்கு தயார்ப்படுத்தல் மற்றும் திட்டமிடல் என்பன குறித்து, ஜனாதிபதியுடன் எதிர்வரும் 2ஆம் திகதி விசேட கலந்துரையாடல் நடத்த உள்ளதாகவும் சந்தை, வணிக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
குற்றப்புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி மீதுதான வழக்கு தள்ளுபடி!
குற்றப் புலனாய்வுப் பிரிவின் புதிய பணிப்பாளராக சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி நிஷாந்த டி சொய்ஸா நியமனம்!
கிளிநொச்சி பிரதான பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் குறித்து ஆராய்வு!
|
|