நாட்டில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கண் பார்வையில்லை!
Tuesday, October 11th, 2016இலங்கையின் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் பார்வையற்றவர்களாக உள்ளதாக ஆய்வின் மூலம் தெரியவந்தள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஒக்டோபர் மாதம் 13ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் சர்வதேச பார்வை தினம் தொடர்பில் ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வின்போது சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.
“உலகில் 285 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பல்வேறு பார்வை குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார தாபனத்தின் புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்டு உலகம் முழுவதிலும் 39 மில்லியன் பேர் பார்வையற்றவர்களாக உள்ளனர்” என்றும் தெரிவித்தள்ளது
“இலங்கையை எடுத்துக்கொண்டால், 15 இலட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு ஏதாவதொரு பார்வை குறைபாடு காணப்படுகின்றது. அதனைபோல, ஒரு இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் பார்வையற்றவர்களாக உள்ளனர். அதனால், இது தொடர்பில் நாம் பல்வேறு விதமான வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம்” என்றார்.
Related posts:
|
|