நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலைமைகள் குறித்த உண்மையை ஊடகங்களுக்கு வெளிப்படுத்துவேன் – முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச அறிவிப்பு!

Friday, May 13th, 2022

தான் பிரதமர் பதவியில் இருந்து விலகும் தீர்மானத்தின் பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைகள் குறித்து எதிர்காலத்தில் ஊடகங்களுக்கு உண்மையை வெளிப்படுத்துவேன் என முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை கூறியுள்ளார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பை எதிர்வரும் நாட்களில் கொழும்பில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும், அனைத்து ஊடகவியலாளர்களையும் கலந்துகொள்ளுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது, நாட்டின் நிலைமை மற்றும் அதற்கான காரணங்களை வெளிப்படுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியை தொடர்ந்து கடந்த 9 ஆம் திகதி பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச விலகியிருந்தார்.

இதனையடுத்து நேற்றையதினம் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். எவ்வாறாயினும், அண்மையில் நாட்டில் ஏற்பட்ட வன்முறைக்கு மகிந்த ராஜபக்ச உள்ளிட்டவர்களே காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன. இதனால் மகிந்த ராஜபக்ச உள்ளிட்டவர்கள் உடன் கைது செய்யப்பட்ட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலைமைகள் குறித்து ஊடகங்களுக்கு உண்மையை வெளிப்படுத்துவேன்  என முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: