நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை அமைதியான முறையிலும் அரசியலமைப்பு ரீதியிலும் தீர்த்து வைப்பதற்கான சந்தர்ப்பம் உருவாகியுள்ளது – ஷவேந்திர சில்வா தெரிவிப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை அமைதியான முறையிலும் அரசியலமைப்பு ரீதியிலும் தீர்த்து வைப்பதற்கான சந்தர்ப்பம் உருவாகியுள்ளது.
இந்தநிலையில், நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்கு அனைத்து பொதுமக்களும் ஆயுதப்படைகள் மற்றும் காவல்துறையினருக்கு தமது ஆதரவை வழங்குமாறு பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முப்படைத் தளபதிகளுடன் இணைந்து இந்த கோரிக்கையை பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா விடுத்துள்ளார்.
நேற்றையதினம் ஜனாதிபதி மாளிகை கைப்பற்றப்பட்டு, ஜனாதிபதி அங்கிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், சில வன்முறை சம்பவங்கள் பதிவாகின.
இந்தநிலையிலேயே பாதுகாப்புப் படைகளின் பிரதானியின் கோரிக்கை வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது..
000
Related posts:
3 பதில் பொலிஸ் மா அதிபர்களை வேண்டும் - பொலிஸ்மா அதிபர் பூஜித!
அரச நிகழ்வுகளை தனியார் விருந்தகங்களில் நடத்தத் தடை!
நல்லூர் திருவிழாவில் கலந்துகொள்ளும் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பிரதமர் மஹிந்த பணிப்பு!
|
|