நாட்டில் எலிக் காய்ச்சல் பரவும் அபாயம்!

Tuesday, May 29th, 2018

தற்போதுள்ள காலநிலை சீரின்மையை அடுத்து எலிக் காய்ச்சல் நோய் பரவும் அபாயம் உள்ளதாகவும் இதனால் நீருடனான அனர்த்த பகுதிகளில் நடமாடும்போது பாதணிகளை அணிந்துகொள்ள வேண்டும் என்று சுகாதார பரிசோதகர்களின் சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலிருந்து வெள்ள நீர் வழிந்தோடிய பின்னர் அப்பகுதிகளை நன்றாகத் தூய்மைப்படுத்திய பின்னர் வீடுகளுக்குச் செல்லுமாறும் பிரதேசங்களை அண்மித்துள்ள சுகாதாரப் பரிசோதகர்களின் உதவியுடன் வீடுகளைச் சுத்தப்படுத்திக் கொள்வதற்காக 011-2635675 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

நீர்த் தாங்கிகளையும் சுத்தம் செய்யுமாறும் கொதித்தாறிய நீரை மாத்திரம் அருந்துமாறும் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் அறிவுறுத்தியுள்ளது.

Related posts: