நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு என்று எதுவும் கிடையாது – தவறாக வழிநடத்தும் தரப்பினரது அறிக்கையால்தான் மக்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டது என பிரதமர் சுட்டிக்காட்டு!

Sunday, March 6th, 2022

எரிபொருள் நெருக்கடி எதுவுமில்லை – மக்களை தவறாக வழிநடத்தும் அறிக்கைகளே பதற்றத்தை ஏற்படுத்தின என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்-

நாட்டை அபிவிருத்தியை நோக்கி நகர்த்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளை ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச எடுத்துள்ளார், இந்த இலக்கை அடைவதற்கு அரசியல்வாதிகள் பிரதமர் அரசாங்க உத்தியோகத்தர்கள் அனைவரும் முயற்சிகைள மேற்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம் சமீப நாட்களில் அதிகம் பேசப்படும் விடயம் எரிபொருள் நெருக்கடி ஆனால் உண்மையில் எரிபொருள் நெருக்கடி என்ற எதுவுமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் கையிருப்பு நான்கு நாட்களிற்கு மாத்திரம் நீடிக்கும் என்ற தவறாக வழிநடத்தும் அறிக்கையால் மக்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனது அன்றைய நிர்வாகத்தின்போது எரிபொருள் கையிருப்பு சிலவேளைகளில் ஒரு நாளைக்கு போதுமானதாக மாத்திரம் காணப்பட்டது என தெரிவித்துள்ள பிரதமர் எனினும் எரிபொருட்களை வெளிநாடுகளில் இருந்து பெறுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டோம் என்றும் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் அரசியலில் குறைந்த அனுபவம் உள்ளவர்களால் வெளியிடப்பட்ட அறிக்கைகள் பதற்றத்தை ஏற்படுத்தின என குறிப்பிட்டுள்ள பிரதமர் இதன் காரணமாக மக்கள் நீண்டவரிசையில் எரிபொருளிற்காக காத்திருந்தனர் எனவும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: