நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை – சிலோன் பெற்றோலிய கூட்டுத்தாபனம்!

Monday, April 24th, 2017

பெற்றோலிய கூட்டுத்தாபன தொழிற்சங்க ஊழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டாலும் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை என சிலோன் பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

எனினும் எரிபொருள் விநியோகிப்பதில் சிறு தாமதம் ஏற்படலாம் என கூட்டுத்தாபன முகாமைத்துவ பணிப்பாளர் நதுன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.இதேவேளை, விடயப் பொறுப்பு அமைச்சர் சந்திம வீரக்கொடி மற்றும் தொழிற்சங்கங்களுடனான சந்திப்பில் இறுதித் தீர்வொன்று பெறப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். எனினும், கோரிக்கைகளுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுகள் வழங்கப்படும் வரை பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: