நாட்டில் உள்ள ஆறு பேரில் ஒருவருக்கு நோய்!

இலங்கையில் ஆறு பேரில் ஒருவருக்கு ஏதேனும் நீண்ட நாள் நோய் காணப்படுவதாக ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
அதாவது இலங்கையின் மொத்த சனத்தொகையில் 18 வீதமானவர்கள் ஏதேனும் ஓரு வகை நீண்ட கால நோய்களினால் பீடிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை குடிசன மதிப்பீட்டு புள்ளி விபரவியல் திணைக்களத்தினால் இந்த மதிப்பீட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
நீரிழிவு, இரத்த அழுத்தம், மாரடைப்பு, புற்று நோய், பக்கவாதம், உள நோய், மூட்டு வலி உள்ளிட்ட நீண்ட கால நோய்களினால் இவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, 15 வயதுக்கும் குறைந்த சிறுவர் சிறுமியருக்கு அதிகளவில் தொற்று நோய்களே பரவுகின்றன என தெரிவிக்கப்படுகிறது
Related posts:
இளைஞன் மீது பொலிஸார் கொடூர தாக்குதல் – யாழில் சம்பவம்!
உலகின் முதல் விமானி இராவணன்தான்!
இன்றுமுதல் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்கும் பணிகள் ஆரம்பம் – கல்முனை மாநகர சபை...
|
|