நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அனைத்தையும் மறு அறிவித்தலிவரை மூடுவதற்கு தீர்மானம் – கல்வி அமைச்சு அறிவிப்பு!

நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகள், முன்பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆகியனவற்றை மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று நாட்டில் தொடர்ந்தும் அதிகரித்து வருவதால் அதன் பாதிப்பின் அபாயத்தைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தனியார் மேலதிக வகுப்புகளை நடத்துவதற்கும் மறு அறிவித்தல் வரை தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அரசாங்கம் எடுத்துள்ள குறித்த தீர்மானத்திற்கு இணங்க சகல கத்தோலிக்க மற்றும் அங்கிலிக்கன் பாடசாலைகளையும் மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
பாரம்பரியம் முக்கியமானது- யாழ் மாணவர் ஒன்றிய தலைவர்!
ஆளுநரிடம் அறிக்கையை கையளித்தது இரணைமடு விசாரணைக் குழு !
விமானிகள் பணிப்புறக்கணிப்பு - விமான சேவைகள் இரத்து!
|
|