நாட்டில் உற்பத்தி செய்யப்படும் விவசாய உற்பத்திகள் பலவற்றிற்கு இலவச காப்புறுதி – விவசாய அமைச்சு தீர்மானம்!

Wednesday, February 14th, 2024

நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கு இலவச காப்புறுதி வழங்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.

தற்போது விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபையினால் 06 வகையான பயிர்களுக்கு இலவச விவசாய காப்புறுதி வழங்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி நெல், மிளகாய், வெங்காயம், உருளைக்கிழங்கு, சோளம், சோயா போன்ற பயிர்களுக்கு இலவச காப்புறுதி வழங்கப்பட்டுள்ளது.

வன விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதம், வறட்சி மற்றும் கனமழையால் ஏற்படும் பயிர் சேதங்களுக்கு இந்த காப்பீடு வழங்கப்படுகிறது.

இதன்படி, சிவப்பு வெங்காயச் செய்கையின் போது பயிர்கள் சேதமடையும் பட்சத்தில் அந்த விவசாயிகளுக்கு இலவச இழப்பீடு வழங்குவதற்காக பயிர்க் காப்புறுதிப் பயிர்களில் சிவப்பு வெங்காயச் செய்கையையும் உள்ளடக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர விவசாய மற்றும் விவசாய காப்புறுதிச் சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதற்கமைய, நெல், மிளகாய், மக்காச்சோளம், வெங்காயம் மற்றும் சோயா பயிர்களுக்கு பயிர் சேதம் ஏற்பட்டால் ஒரு ஏக்கருக்கு.40,000 ரூபா மற்றும் ஹெக்டேருக்கு .1 இலட்சம் இழப்பீடுகளை விவசாய மற்றும் கமநல காப்பீட்டு வாரியம் வழங்க தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: