நாட்டில் உரத்துக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை – விவசாய அமைச்சு தெரிவிப்பு!

Tuesday, October 31st, 2023

நாட்டில் தற்போது உரத்துக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

பெரும்போக பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் யூரியா உரத்துக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சில விவசாய அமைப்புகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் உண்மைக்கு புறம்பானவை என குறித்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

தற்போது, அரச மற்றும் தனியார் உர நிறுவனங்கள் மூலம் விவசாயிகளுக்கு உரங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

விவசாயிகளுக்கு, 50 கிலோகிராம் உர மூடை ஒன்று அரச நிறுவனங்கள் மூலம் ஒன்பதாயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

அத்துடன் தனியார் நிறுவனங்கள் மூலம் 8 ஆயிரத்து 500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளதாகவும் விவசாய அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: