நாட்டில் இதுவரை 23 இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டது!
Tuesday, June 15th, 2021நாட்டில் இதுவரை 23 இலட்சத்து 17 ஆயிரத்து 12 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய நேற்று மாத்திரம் 31 ஆயிரத்து 440 பேருக்கு சீனாவின் சினோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.
அதன்படி நாட்டில் இதுவரை 13 இலட்சத்து 26 ஆயிரத்து 784 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும் சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் நேற்று 66 ஆயிரத்து 463 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதனையடுத்து, நாட்டில் இதுவரையில், 2 இலட்சத்து 53 ஆயிரத்து 835 பேர் சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றுள்ளனர்.
இதேவேளை நேற்றையதினம் 263 பேருக்கு கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய இதுவரை 3 இலட்சத்து 55 ஆயிரத்து 675 பேருக்கு கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை இதுவரை 64 ஆயிரத்து 986 பேருக்கு ஸ்புட்னிக் வீ தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|