நாட்டில் இதுவரை 209 மருத்துவர்கள், ஆயிரம் தாதியர்களுக்கு கொரோனா தொற்றால் பாதிப்பு – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவிப்பு!

Friday, August 20th, 2021

இலங்கையில் 209 மருத்துவர்களுக்குக் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

தொற்றுக்குள்ளான மருத்துவர் களில் 30 – 40 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருவதுடன், ஒரு மருத்துவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார் என்றும் குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.

இவர்களில் கொழும்பு தேசிய மருத்துவமனையைச் சேர்ந்த 27 மருத்துவர்களும், ஹோமாகம மருத்துவமனையைச் சேர்ந்த 17 மருத்துவர்களும் உள்ளடங்குகின்றனர். இதனிடையே, 3 மருத்துவர்கள் இதுவரை கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர் என்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் ஆயிரம் தாதியர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், அவர்களில் மூவர் உயிரிழந்துள்ளனர் எனவும் அகில இலங்கை தாதியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதுமாத்திரமின்றி, 37 பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: