நாட்டில் அவசரகால நிலைமை பிரகடனம் – வெளியிடப்பட்டது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வர்த்தமானி அறிவித்தல்!

Saturday, April 2nd, 2022

கடந்த நள்ளிரவுமுதல் (01.04) அமுலாகும் வகையில் இலங்கையில் அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையில் மக்கள் அவசரகால நிலைமை நிலவுவதன் காரணமாக, பொதுமக்களின் பாதுகாப்பு, நாட்டின் அமைதியைப் பாதுகாத்தல், பொதுமக்கள் வாழ்வுக்கு அத்தியாவசியமான வழங்கல்கள் மற்றும் சேவைகள் என்பவற்றைப் பேணுவதற்காக இவ்வாறு செய்தல் உசிதமானதாகவுள்ளதென தாம் அபிப்பிராயப்படுவதினால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக அந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 2 ஆம் பிரிவினால் தமக்குரியதாக்கப்பட்ட தத்துவங்களின் பயனைக்கொண்டு அந்தக் கட்டளைச் சட்டத்தின் பாகம் 2 இன் ஏற்பாடுகள் ஏப்ரல் மாதம் 01 ஆம் திகதி தொடக்கம் இலங்கை முழுவதும் நடைமுறைக்கு வருதல் வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

000

Related posts: