நாட்டில் அராஜகம் செய்யும் குழுக்களுக்கு கடும் நடவடிக்கை – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

சமூகப் போராட்டம் தோல்வியடையும் போது அதன் பின்னணியில் உள்ள குழுக்கள் மதப்போராட்டத்திற்குத் தயாராகும் எனவும், அதுவும் தோல்வியுற்றால் நாட்டில் இனவாதத்தை விதைப்பார்கள் எனவும் ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளரும், நகர அபிவிருத்தி வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு நேற்று (2) வருகை தந்த போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
நாட்டை அராஜகம் செய்யும் இவ்வாறான குழுக்களுக்கு எதிராக யார் மூக்கை நுழைத்தாலும் பொருட்படுத்தாது அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வெறுப்புப் பேச்சுக்களை பரப்பி மக்களை அடைத்து வைக்கும் நபர்களுக்கும் குழுக்களுக்கும் எதிராக மக்கள் கிராம மட்டத்தில் நிற்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
கடந்த வருடம் மே மாதம் 9 ஆம் திகதி உடுகம்பொலவில் உள்ள தனது வீட்டை போராட்டக்காரர்கள் சேதப்படுத்தியமை தொடர்பிலும் அமைச்சர் இதன்போது கருத்து தெரிவித்துள்ளார்.
அன்றைய பொருளாதார பிரச்சினை காரணமாக மக்கள் அமைதியான போராட்டத்தை நடத்தினர். ஆனால் அமைதி போராட்டம் திட்டமிட்ட முறையில், வீடுகளை எரிக்கவும், மக்களை அடித்துக் கொல்லவும் என மாற்றப்பட்டமையை அவர்கள் எதிர்ப்பார்க்கவில்லை.
அவற்றை அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயற்பட்ட சில ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள் செய்தவை” என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|