நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கு எந்தவொரு தட்டுப்பாடும் இல்லை – அமைச்சர் பந்துல குணவர்த்தன !

Sunday, October 25th, 2020

நாட்டில் அத்தியாவசிய நுகர்வு பொருட்களுக்கு எந்தவொரு தட்டுப்பாடும் இல்லை என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அத்துடன் பொதுமக்கள், தேவையற்றவிதத்தில் உணவுப் பொருட்களைச் சேமித்து வைக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தலான சூழ்நிலை நாட்டில் ஏற்பட்டுள்ளமையால், நுகர்வு பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படுமென்ற அச்சத்தில் பொதுமக்கள் சில தினங்களாக நுகர்வு பொருட்களை அதிகளவு கொள்வனவு செய்வதனை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.

இந்நிலையிலேயே அமைச்சர் பந்துல குணவர்தன மக்களுக்கு இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்-, “சதொச நிறுவனங்களில் 600 ரூபாய்க்கும் மேற்பட்ட அளவில் பொருட்களை கொள்வனவு செய்பவர்களுக்கு மாத்திரமே சீனி கிலோ ஒன்று 85 ரூபாய்க்கு வழங்கப்படும்.

சட்டவிரோதமான முறையில் மதுபானம் உற்பத்தி செய்பவர்கள் அதிகமான சீனிகளை கொள்வனவு செய்வதனால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளது” எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: