நாட்டில் அதிகரித்துச் செல்லும் கொரோனா மரணங்கள்!

Tuesday, December 15th, 2020

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 154 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இருவர் உயிரிழந்த நிலையில் இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை இவ்வாறு அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 33,478 ஆக அதிகரித்துள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்

இதேவேளை  நாட்டில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் 688 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக COVID து19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது.இவர்களில் மூவர் வௌிநாடுகளில் நாட்டிற்கு வருகை தந்தவர்களாவர்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் கொழும்பு மாவட்டத்தில் 200 பேரும் கம்பஹா மாவட்டத்தில் 113 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 55 பேரும் நுவரெலியாவில் 38 பேரும் கண்டி மாவட்டத்தில் 16 பேரும் வவுனியா மாவட்டத்தில் 07 பேரும் யாழ். மாவட்டத்தில் 06 பேரும் மட்டக்களப்பில் ஒருவரும் அம்பாறையில் 28 பேரும் அடங்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts: