நாட்டில்தொடர்ந்தும் 12 மணித்தியாலங்களுக்கு ஊரடங்கு நடைமுறையில்!

Saturday, May 14th, 2022

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் இன்று காலை 6 மணிக்கு தற்காலிகமாக தளர்த்தப்பட்டுள்ளது.

பின்னர் இன்று மாலை 6 மணிக்கு மீள அமுலாக்கப்படவுள்ள ஊரடங்கு சட்டம், நாளை அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்படும் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் எந்தவொரு பகுதியிலும் வன்முறைச் செயற்பாடுகள் இடம்பெற்றால் அது தொடர்பில் தகவல் தெரிவிக்க புதிய தொலைபேசி இலக்கங்களை பாதுகாப்பு அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்படி, 076 739 39 77 அல்லது 011 244 11 46 ஆகிய இலக்கங்களுக்கு வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் தகவல் வழங்க முடியும் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், 118 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கும் வன்முறைச் செயற்பாடுகள் தொடர்பில் அறிவிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

நான்கு கட்டங்களாக நாடளாவிய ரீதியில் மின்வெட்டு - அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த ஏனைய மின் சாதனங்களை தவ...
பீ.சி.ஆர் பரிசோதனை அறிக்கையை சுகாதார பிரிவினரிடம் கையளிக்காவிட்டால் யாழ்.நகரில் வர்த்தக நிலையங்களை த...
தடுப்பூசி வழங்கும் இலக்கை எவ்வித பிரச்சினைகளும் இன்றி அடைய முடியும் - சுகாதார அமைச்சு நம்பிக்கை!