நாட்டிலுள்ள சிறுதொழில் முயற்சியாளர்களுக்கு நிதியுதவி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்!

Friday, April 22nd, 2022

நாட்டிலுள்ள சிறுதொழில் முயற்சியாளர்களுக்கு நிதியுதவி வழங்கும் வேலைத்திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக ஐரோப்பிய ஒன்றியத்தினால் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இதன் கீழ், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத்துறையை புத்துயிர் பெறும் நோக்கில், அத்தகைய தொழில்முயற்சியாளர்களுக்கு தலா ஒரு மில்லியன் ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய முதல் மூன்று தொழில்முனைவோருக்கு நேற்று வியாழக்கிழமை நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய அலுவலகம் மற்றும் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், சுற்றுலாத் துறையிலுள்ள 60 சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களுக்கு அடுத்த இரண்டு மாதங்களில் தலா 1 மில்லியன் ரூபாய் நிதியுதவி வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts: