நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் 15 ஆம் திகதிமுதல் திறக்கப்படும் – கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தகவல்!

Wednesday, February 10th, 2021

நாட்டின் அனைத்து பாடசாலைகளையும் எதிர்வரும் 15 ஆம் திகதி திறப்பதற்கு தீர்மானித்துள்ளதாக கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் அனைத்து வகுப்பு மாணவர்களுக்காகவும் திறக்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் தெளிவுபடுத்தியுள்ள கல்வி அமைச்சர் மேலும் கூறுகையில் –

மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தலுக்கு முடக்கப்பட்டுள்ள பொலிஸ் நிர்வாகப் பிரதேச பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய அனைத்துப் பாடசாலைகளும் தற்போது திறக்கப்பட்டுள்ள நிலையில், மேல் மாகாணத்தில் கொழும்பு, களுத்துறை, மாவட்டங்களில் பாடசாலைகள் மீள ஆரம்பிப்பது தொடர்பில் மாவட்ட அபிவிருத்திக்குழு பரிந்துரைகளை வழங்கியுள்ளதாகவும் அதற்கிணங்கவே பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு, களுத்துறை, கம்பஹா மாவட்டங்களின் அபிவிருத்திக் குழுவின் பரிந்துரைகள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் அது அனுமதிக்காக சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அந்த அனுமதி கிடைத்ததும் எதிர்வரும் 15 ஆம் திகதி மேல் மாகாணத்தில் பெருமளவு பாடசாலைகள் மீள ஆரம்பிக்கக் கூடிய வாய்ப்புள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: