நாட்டிலும் நிலவிய எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு நேற்றுமுதல் முற்றுப்புள்ளி – வலு சக்தி அமைச்சு அறிவிப்பு!

நாட்டில் நிலவிய எரிபொருள் தட்டுப்பாடு நேற்றுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக வலு சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி நேற்றையதினம் நாடு முழுவதுமுள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் அதற்கான முன்னெடுக்கப்பட்டதாகவும் அமைச்சு தெரிவித்தது.
அதேவேளை, கடந்த 2013 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதல் தடவையாக உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை 118 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளதால், விலையை கட்டுப்படுத்தும் வகையில் அமெரிக்கா தம்மிடமுள்ள மேலதிக 30 மில்லியன் மசகு எண்ணெய் பீப்பாய்களை உலக சந்தைக்கு விநியோகிப்பதற்கு தீர்மானித்துள்ளது.
அதற்கான நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக சர்வதேச வலு சக்தி முகவர் நிறுவனத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அமெரிக்கா தீர்மானத்தை அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|