நாட்டிலிருந்து 3 வருடங்களில் டெங்கு முற்றாக ஒழிக்கப்படும்!
Wednesday, August 31st, 2016அடுத்து வரும் 3 வருடங்களில் இலங்கையில் இருந்து டெங்கு நோயினை முற்றாக ஒழிக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும் தொற்று அல்லாத நோயினை கட்டுப்படுத்துவதற்காக அதிக முன்னுரிமைகள் வழங்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். தொற்றா நோய்களின் அபாயகரமான காரணிகள் தொடர்பான ஆய்வு அறிக்கையினை கொழும்பில் நேற்று வெளியீடு செய்யும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை 2013ஆம் ஆண்டில் 39 வீதமாக காணப்பட்ட புகைத்தலுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கையானது இந்த வருட ஆய்வறிக்கையில் 34.8 வீதமாக குறைவடைந்துள்ளதாகவும், கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது 10.2 வீதமாக இது குறைவடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் இலங்கையில் பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவாக எடுப்பவர்கள் மிகவும் குறைவாக காணப்படுவதாகவும், இதில் 18தொடக்கம் 69 வயதுக்கு இடைப்பட்டவர்களில் 72.5 வீதமானோரே தமது அன்றாட உணவுகளில் காய்கறிகள் மற்றும் பழங்களை சேர்த்துக் கொள்வதாகவும் சுகாதார அமைச்சின் ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்
Related posts:
|
|