நாட்டிற்கு வருகைத்தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு – சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தகவல்!

Wednesday, July 10th, 2024

நாட்டிற்கு வருகைத்தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் கடந்த மாதத்திலிருந்து குறிப்பிடத்தக்களவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதற்கமைய, ஜூலை முதல் வாரத்தில் 43,000 க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகைத்தந்துள்ளதாகவும் அந்த சபை தெரிவித்துள்ளது.

அதன்படி சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தற்காலிகத் தரவுகளின்படி வருடாந்தம் 1,053,332 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஆண்டு ஜூன் முதல் வாரத்துடன் ஒப்பிடுகையில், ஜூலை முதல் வாரத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 89 சதவீதம் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: