நாட்டிற்கு வருகைதரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை கடந்த சில மாதங்களாக அதிகரிப்பு – இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவிப்பு!

நாட்டில் கடந்த சில மாதங்களாக சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகின்றது.
அந்தவகையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டிற்கு 13 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
இதனிடையே டிசம்பர் முதலாம் திகதி முதல் கடந்த ஞாயிற்றுக்கிழமை வரையில் ஒரு இலட்சத்து 750 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர் என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
இந்த காலப்பகுதியில் இந்தியாவில் இருந்து 20 ஆயிரத்து 597 சுற்றுலாப் பயணிகளும், ரஷ்யாவிலிருந்து 14ஆயிரத்து 156 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 10 ஆயிரத்து 281 சுற்றுலாப் பயணிகளும் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
எதிர்வரும் நத்தார் மற்றும் புதுவருட விடுமுறைகளை இலங்கையில் கழிப்பதற்காகவே பெருமளவானோர் தற்போது நாட்டிற்கு வருகை தந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|