நாட்டிற்கு கிடைக்கக்கூடிய உதவிகளை உடனடியாக பெற்றுக்கொள்ள நடவடிக்கை – பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Friday, May 27th, 2022

நாட்டிற்கு கிடைக்கக்கூடிய உதவிகளை உடனடியாக பெற்றுக் கொள்வதற்கான சில வேலைத்திட்டங்கள் அமுல்படுத்தப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து விளக்கமளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பில் எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வில் விசேட அறிக்கையொன்று வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு உதவிகளை வழங்குவதற்கு சீனா இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை உத்தேச 21 ஆம் அரசியலமைப்பு திருத்தச் சட்டமூல யோசனை குறித்து கலந்துரையாடுவதற்காக, கட்சித் தலைவர்களை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று அழைத்திருநதார்.

இதன்போது முன்வைக்கப்படும் யோசனைகளைக் கருத்திற்கொண்டு உத்தேச 21 ஆம் அரசியலமைப்பு திருத்த யோசனை அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டது.

அத்துடன் அமைச்சரவையின் அனுமதி கிடைக்கப்பெற்றதன் பின்னர், அதனை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கத் தீர்மானிக்கப்பட்டது.

இதேநேரம், உத்தேச 21ஆம் திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

21 ஆம் திருத்தச் சட்டமூலம் தொடர்பான விசேட கலந்துரையாடல் டார்லி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் அதன் தலைவர் மைத்ரிபால சிறிசேன தலைமையில் கடந்ததினம் இடம்பெற்றது.

இதன்போது, இந்த உத்தேச வரைவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் இணக்கம் ஏற்பட்டதாக அமைச்சர் நிமல் ஸ்ரீபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன், 21ஆம் திருத்த சட்டமூலத்திற்கு தேவையான யோசனைகளையும் முன்வைக்க தீர்மானிக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்து.

000

Related posts: