நாட்டிற்குள் புதிய பிறழ்வு எந்த நேரத்திலும் நுழையலாம் – சுற்றுலாவுக்கான காலமும் இதுவல்ல – மக்களை எச்சரிக்கிறார் சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்தன!

எப்போது வேண்டுமானாலும் நாட்டிற்குள் புதிய கொரோனா பிறழ்வு நுழையலாம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அசேல குணவர்தன எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் சுற்றுலாப் பயணிகளுக்காக நாடு திறப்பட்டுள்ள அதேவேளை துறைமுகங்கள் மீண்டும் செயற்படத் தொடங்கியுள்ளதால் புதிய மாறுபாடுகள் நாட்டுக்குள் பரவி கணிக்க இயலாத தாக்கத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
எனவே முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தாலும் பொதுமக்கள் சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் நடைமுறைகளை அவசியம் பின்பற்ற வேண்டும் என்றும் வைத்தியர் அசேல குணவர்தன அறிவுறுத்தியுள்ளார்..
இதனிடையே மொத்த மக்கள்தொகையில் 67 சதவிகிதமானோர் முதலாவது தடுப்பூசியையும் 58 சதவிகிதமானோர் முழுமையாகவும் தடுப்பூசியை செலுத்தியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் திருப்திகரமான நிலையை அடைய வேண்டுமானால், மொத்த மக்கள் தொகையில் 70 முதல் 80 சதவிகிதமாணவர்கள் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அசேல குணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் அத்தியாவசியமற்ற பயணங்களை குறைந்தபட்டசம் டிசம்பர் மாத இறுதி வரை கட்டுப்படுத்துமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன கேட்டுக்கொண்டுள்ளார்.
அன்றாடம் சுமார் 700 கொரோனா நோயாளர்கள் பதிவாகி வருவதாகவும் எனவே இதுபோன்ற சூழ்நிலைகளில், அத்தியாவசியமற்ற பயணங்கள் தடை செய்யப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் உறவினர்களைப் பார்ப்பதற்கோ அல்லது சுற்றுலாப் பயணங்களில் ஈடுபடுவதற்கான காலம் இதுவல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டியள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|