நாட்டின் வளிமண்டலத்தில் தூசு துகள்களின் செறிவு அதிகரிப்பு – சுவாச நோயாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் சிரேஷ்ட நிபுணர்!

Monday, November 2nd, 2020

நாட்டின் வளிமண்டலத்தில் தூசு துகள்களின் செறிவு அதிகரித்துள்ளதாககவும் குறிப்பாக தென் மாகாணம் தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில் தூசு துகள்களின் செறிவு அதிகரித்துள்ளது என்றும தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் சிரேஷ்ட நிபுணர் பேராசிரியர் சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளார்.

குறிப்பாக கடந்த மாதம் 26 மற்றும் 27ஆம் திகதிகளில் வளி மாசடைதல் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தூசு துகள்களின் செறிவு 100 முதல் 150 ஆக அதிகரித்துள்ளதாகவும் இதனால் சுவாச நோயாளர்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இலங்கைக்கு அண்மைய நாடான இந்தியாவில் ஏற்பட்ட வளி மாசடைவு மற்றும் நாட்டின் வளிமண்டல எல்லைப்பகுதியில் ஏற்பட்ட மாசடைவு ஆகியன இதற்கு காரணம் என்றும் பேராசிரியர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: