நாட்டின் வளர்ச்சி தொடர்பில் இளைஞர் சமூகம் கவனம் செலுத்த வேண்டும் – இளைஞர்களுக்கு அமைச்சர் நாமல் அழைப்பு!

Sunday, September 26th, 2021

குறித்த நேரத்திற்கு கொவிட் தடுப்பூசி மத்திய நிலையங்களுக்கு சென்று தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளுமாறு இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, நாட்டின் இளைய தலைமுறையினரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்துடன், 20 முதல் 29 வயதுக்குட்பட்டவர்களில் தடுப்பூசி பெற்றுக் கொள்பவர்களின் சதவீதம் குறைந்து காணப்படுவது தொடர்பாக, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நாட்டின் வளர்ச்சிக்கு இளைஞர் சமூகம் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியம் பற்றியும் அமைச்சர் நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே

அத்தியாவசியப்பொருட்களின் விலைகளை தீர்மானிக்கும் போது நுகர்வோர்களின் நலன்களையும் வர்த்தகர்களின் நலன்களையும் கருத்தில் கொள்ளவேண்டியுள்ளது என  அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

வர்த்தகர்கள் இழப்பை சந்தித்தால் நாட்டில் அத்தியாவசியப்பொருட்களிற்கு தட்டுப்பாடு ஏற்படலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் நிதியமைச்சு பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: