நாட்டின் மருந்து தேவையில் 50 வீதம் உள்நாட்டில் உற்பத்தி செய்ய தீர்மானம் – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச வலியுறுத்து!

நாட்டின் மருந்து தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி கோத்தாபய தெரிவித்துள்ளார்.
தரமான மருந்துகளை வெளிநாட்டுச் சந்தையிலும் பார்க்க பொதுமக்களுக்கும் மலிவு விலையில் வழங்குவதே இதன் நோக்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அனைத்து தயாரிப்புகளும் உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைகள் மற்றும் தரங்களுக்கு ஏற்ப தயாரிக்கப்படும். தற்போது நாட்டிற்கு தேவையான 85% மருந்து வகைகள் இறக்குமதி செய்யப்படுகிறது.இதற்கான ஆண்டு செலவு சுமார் 130 பில்லியன் ரூபாவாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்நாட்டிற்குத் தேவையான மருந்துகளை உள்நாட்டில் உற்பத்தி செய்தால் நாட்டிற்கு ஆண்டுக்கு 60 பில்லியன் ரூபா சேமிக்கலாம். அதனுடன் தொடர்புடைய இலக்குகளை நாம் அடைய முடியும் எனவும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை தொடர்பாக இராஜாக அமைச்சகத் தின் எதிர்கால திட்டங்கள் குறித்து நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போது ஆசிய பிராந்தியத்தில் அதிக அளவில் மருந்து வகைகளை இறக்குமதி செய்யும் நாடாக இலங்கை உள்ளது. இந்த நிலையை உடனடியாக மாற்ற வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி கோத்தபாஜ ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.
மேலும் பெரிய அளவிலான உள்ளூர் முதலீட்டாளர்கள் பங்களிப்பு செய்ய விருப்பம் தெரிவித்ததாகவும் தெரிவித்த ஜனாதிபதி வெளிநாட்டுச் சந்தைகளைக் குறிவைத்து மருந்துகளை உற்பத்தி செய்வதற்காக ஹம்பாந்தோட்டா தொழில்துறை தோட்டத்தில் 400 ஏக்கர் முதலீட்டு மண்டலம் நிறுவப்படும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் பொதுத்துறையை அபிவிருத்தி செய்வதோடு, தனியார்த்துறை தொழில்முனை வோரை வலுப்படுத்தவும் அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|